Monday, November 30, 2009

நம்பிக்கை உங்களைக் காப்பாற்றும்

ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் வசித்தன. நண்பர்களான, அந்த தவளைகள் வித்தியாசமாக சிந்தனை செய்தபடியே இருந்தன. ஒருநாள் தன் நண்பனிடம் பேசிய இன்னொரு தவளை, "நண்பா! இந்தக்குளத்து வாழ்க்கை போரடித்து விட்டது. நாம் யார் வீட்டுக்குள்ளாவது புகுந்து, மனிதர்களைப் போல் வாழ்ந்து பார்ப்போமே," என்றது. நண்பன் தவளையும் ஒப்புக்கொண்டது. இரண்டும் குளத்தில் இருந்து வெளியேறி ஒரு வீட்டுக்குள் புகுந்து மறைந்து கொண்டன. அந்த வீட்டுத்தலைவி, பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பற்ற வைத்து விட்டு, வீட்டுக்குள் ஏதோ வேலை யாகப் போய்விட்டாள். வெள்ளை நிறத்தில் ஏதோ ஒரு திரவத்தைப் பார்த்த இரண்டு தவளைகளும், அதற்குள் குதித்து விளையாடுவோமே என குதித்து நீந்தின. சற்றுநேரத்தில் சூடு அதிகமாகவே இரண்டும் திணறின. ஒரு தவளை, "நண்பா! பயப்படாதே. கடவுள் இருக்கிறார். நம்மைக் காப்பாற்றுவார்," என்றது.

இன்னொரு தவளையோ பயத்தில் உளறியது, இந்த நிலையில் கடவுளால் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது என்ற பயத்திலேயே இறந்து விட்டது.

கடவுள் நம்பிக்கையுள்ள தவளை, பால் பொங்கும் சமயத்தில் மேலே எழும்பி வந்து, குதித்து சிறு காயத்துடன் தப்பி விட்டது.

பைபிளில், நம்பிக்கையைப் பற்றிய வசனங்கள் இருக்கின்றன.

* நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்; பார்வையால் அல்ல.

* உயிரற்ற உடல் செத்ததாயிருப்பது போலவே, நம்பிக்கையற்ற செயலும் செத்ததே.

* மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதை விட, கர்த்தரிடம் நம்பிக்கை வைத்திருப்பதே நல்லது. ஆம்...நம்பிக்கையுடன், பயமின்றி வாழ்க்கையை நடத்தினால், ஆண்டவர் நம்முடன் துணை வருவார்.

படிக்காதவர்களே! பிராயச்சித்தம் தேடுங்க!

பள்ளிக்குச் செல்லும் காலத்தில் பெற்றவர்கள் பிள்ளைகளைக் காலை 5 மணிக்கு எழுப்பி விடுவார்கள் படிப்பதற்காக!
குழந்தைகளோ சோம்பலுடன் தூங்குவார்கள், பெற்றவர்களைத் திட்டுவார்கள். மாலை வேளையில் படிக்கச் சொன்னால் விளையாடப் போய் விடுவார்கள். விளைவு மார்க்கே இருக்காது. நினைத்த கோர்ஸ் கிடைக்காது. பிற்காலத்தில் இதே மாணவர்கள் வளர்ந்து பெரியவனாகி ஏதோ ஒரு வேலைக்கு போயிருப்பார்கள். அப்போது பெற்றவர்கள் சொன்னதைக் கேட்காமல் விட்டதால் வந்த விளைவை நினைத்து கண்ணீர் வடிப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், இப்போது உங்களுக்கு என்ன வேலை கிடைத்துள்ளதோ, அதையாவது கருத்தூன்றி பார்க்க வேண்டும். அது கஷ்டமாகத் தெரிந்தால் அந்த வேலையைச் செய்யும் பலத்தையும், ஞானத்தையும் கடவுளிடம் மன்றாடி கேட்க வேண்டும். சிறுவயதில் தவறு செய்து விட்டதாலேயே இப்போது கஷ்டப்படுகிறார்கள் சிலர். தவறை தங்கள் மீது வைத்துக் கொண்டு, ஆண்டவரிடம் கோபிப்பதில் அர்த்தமே இல்லை.
"ஆண்டவருக்கு பயப்படுவதே ஞானம். பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி" என்கிறது பைபிள்.

தாயன்புக்கும் மேலான அன்பு

இங்கிலாந்து நாட்டில், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம் தாய் தன் பச்சிளம் குழந்தையுடன் தெற்குவேல்ஸ் மலையில் நடந்து கொண்டிருந்தாள். அப்போது, எதிர்பாராத விதமாக கடும் பனிப்புயல் அடித்தது. குளிர் தாளாமல் அந்தத்தாய் மரணமடைந்தாள். அவளது உடலைத் தேடி மீட்புக்குழுவினர் சென்றனர்.
ஓரிடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த இடத்தில் கிடந்த தாயின் சடலத்தை படையினர் புரட்டினர். சடலத்துக்கு கீழே சுற்றப்பட்ட ஒரு கோட் மற்றும் துணிக்குள் குழந்தை இருந்தது. குழந்தையை படையினர் மீட்டனர்.
கடும் குளிரால் தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் குழந்தை பிழைக்க வேண்டும் எனக்கருதிய அந்தத்தாய், தன் கோட்டைக் கழற்றி, குழந்தையின் உடலில் சுற்றியிருந்தாள். அதனால் குழந்தை பிழைத்தது. அந்தக் குழந்தை வேறு யாருமல்ல! 1916ம் ஆண்டில் இங்கிலாந்து பிரதமராக இருந்த டேவிட் லாயிட் ஜார்ஜ் தான்.
"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ?" என்று பைபிள் சொல்கிறது. தாயன்புக்கு ஈடு இணை இல்லை தான்!
ஆனால், தாயன்புக்கும் மேலானது கர்த்தருடைய அன்பு. இந்த உலகத்தில் ஒரு நல்லவன் காப்பாற்றப்பட வேண்டுமென்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த சிலர் இருக்கலாம். ஆனால், பாவிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக யாராவது உயிர் விடுவார்களா? அத்தகைய தியாகத்தைச் செய்தவர் இயேசுநாதர்.
"நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத்துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில், கிறிஸ்து நமக்கு மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணுகிறார்" என்ற வசனம் அவரது தியாகத்தை நிரூபிக்கிறது.

சர்ச்சுக்கு செல்வது பொழுதுபோக்கிற்காகவா?

"ஞாயிற்றுக்கிழமையா...தவறாமல் நான் சர்ச்சுக்கு போய் விடுவேன்" என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறோம். ஆனால், சர்ச்சுக்குப் போனதும் பைபிளை வாசிப்பதைக் கேட்கிறீர்களா? பிரசங்கத்தை செவிமடுக்கிறீர்களா? அங்கே, ஏதோ நடந்து கொண்டிருக்க, நீங்கள் ஆலயத்தை விட்டு வெளியேறி, சொந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இதனால், என்ன லாபம்?
1930ல் காந்திஜி தென்ஆப்ரிக்காவில் இருந்தார். சில கிறிஸ்தவ நண்பர்களின் ஆலோசனைப்படி ஞாயிறுதோறும் சூவெஸ்லியன்' சர்ச்சுக்கு சென்றார். அங்கு சென்றதைப் பற்றி அவரே சொல்கிறார், கேளுங்கள்.
"அங்கு நடந்த எந்தக் காரியங்களும் எனக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. சபையார் நடந்து கொண்ட முறையில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. அவர்கள் தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்ல முடியாது. உலக சிந்தையுள்ளவர்களாகவே இருந்ததைக் காண முடிந்தது. ஆலயத்திற்கு வருவதை ஒரு பொழுதுபோக்காகவும் ஏதோ சடங்காச்சாரத்திற்காகவும் வருகிறவர்கள் போல் தான் தெரிந்தது. அந்த ஆலயத்திலிருந்த வேளையில் அநேக சந்தர்ப்பங்களில் என்னையும் அறியாமல் தூங்கி விடுவேன். தொடர்ந்து, ஆலயத்திற்கு செல்வதால் எந்த பயனுமில்லை என்று நினைத்து அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்," என்கிறார்.

அவர் சொல்லி 77 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது நம் ஆலயம் எப்படி இருக்கிறது? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? பைபிளை கற்றறிகிறோமா? பிரசங்கங்களை கேட்கிறோமா? சுய பரிசோதனை செய்து பாருங்கள். "சகல மனிதர்களாலும் அறிந்து வாசிக்கப்படும் நிருபமாக" என்ற வசனப்படி நாம் மாற வேண்டும். ஒரு நடமாடும் பைபிளாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கடவுள் மீது விசுவாசம் வேண்டும்

கடவுளிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, பைபிளில் சொல்லப்பட்டுள்ள ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். மனிதனின் அட்டூழியங்களை தாங்கமாட்டாத கடவுள், இந்த உலகை ஜலப்பிரளயத்தால் அழிக்க நினைத்தார். ஆனாலும் நீதிமானும், உத்தமனுமாய் இருப்போரை பிரளயத்தில் இருந்து தப்பிக்கவும் கரிசனையுள்ளவராயிருந்தார். நோவா என்பவன் அத்தகைய உத்தமனாயிருந்தான். அவனையும், அவனது குடும்பத்தையும் தப்புவிக்கும் பொருட்டு ஒரு பேழையைச் செய்யச் சொன்னார்.
நோவா நூறு ஆண்டுகளாக ஒரு பேழையைச் செய்தான். இதைக் கண்டவர்கள் எள்ளி நகையாடினர். "கடவுள் சொன்னார் என்பதற்காக இப்படி செய்து கொண்டிருப்ப தாகச் சொல்கிறானே! இதை எப்படி நம்புவது" என்று பரிகாசம் செய்தனர்.
பைபிளில் ஒரு அழகான வசனம் உண்டு.
"காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்ப வேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்கு பொறுமையோடே காத்திருப்போம்" என்பதே அவ்வசனம்.
வானத்திலே நிலா இருக்கிறது என்றால் சூஆம், அதைக் கண்ணால் பார்ப்பதால் நம்புகிறேன்' என்பது பெரிய விஷயமல்ல. சூஇந்த பூமியில் தேவன் இருக்கிறார். அவரது வருகை ஒருநாள் நிச்சயம்' என சொல்வதை நம்பவேண்டும்.
நோவா கடவுள் சொன்னதைச் செய்தார். சொன்னது போலவே பிரளயம் வந்தது. கேலி செய்தவர்களெல்லாம் அழிந்தனர். நோவாவின் குடும்பம் மட்டும் கடவுள் மீது கொண்ட விசுவாசத்தால், அவர் சொன்னதைக் கேட்டதால் பேழையில் அமர்ந்து தப்பியது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மீண்டும் வருவார் என்பதை விசுவாசிக்க வேண்டும். அவர் வரும் நாளில் நாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டும்.
அவரது பிள்ளைகளாக திகழ்ந்து, அவர் சொன்னதை விசுவாசித்து, நல்லவழியில் வாழ வேண்டும். அதற்கு இப்போதே உறுதி எடுப்போமா?

வாழ்வின் பொருள் என்ன?

அமெரிக்க பேராசிரியரான ஹியூஜ் மூர்ஹெட் என்பவர், உலகத்தின் தலைசிறந்த அறிவாளிகள் 250 பேரைத் தேர்ந்தெடுத்து, "வாழ்வின் அர்த்தம் என்ன?' என்று ஒரு கேள்வி கேட்டார். அந்த அறிவு ஜீவிகள் ஆளுக்கொரு கருத்தைக் கூறினர். அவற்றைத் தொகுத்து அவர் ஒரு புத்தகம் வெளியிட்டார்.
வாழ்வைப் பற்றி அவர்கள் சொன்னது எல்லாமே வெறும் யூகங்களாகவும், தற்பெருமை கொண்டதாகவுமே அமைந்திருந்தன. ஒருவர் கூட "கடவுளின் சித்தப்படியே நமது வாழ்வு அமைந்திருக்கிறது' என சொல்லவில்லை.
மூர்ஹெட் வாழ்வைப் பற்றி எழுதும் போது, "சிருஷ்டிப்பின் நோக்கம் இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் நாம் தாயின் கருவில் உருவாகும் முன்பே தேவனுடைய சிந்தையில் இருந்தோம் என்பது உறுதியான விஷயம்,' என்று சொல்லியிருந்தார்.
""நான் உனக்கு போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்,'' என்று இயேசு சொன்னது பைபிளில் இருக்கிறது.
ஆம்...ஆண்டவரே நம்மை வழி நடத்த முடியும். "நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே வாழ்க்கை, இதன் அர்த்தம் என்ன?' என்று யாராவது உங்களிடம் கேட்டால், "அது ஆண்டவனின் சித்தத்தைப் பொறுத்தது, அவர் எண்ணப்படியே எல்லாம் நடக்கும்' என பதில் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.

குழந்தைகளே! இதைப்படிங்க முதல்லே...!

நாம் இந்த உலகில் செல்வச்செழிப்புடனும், புகழுடனும் நடமாட காரணமானவர்களே பெற்றோர் தான். சில பிள்ளைகள் பெற்றோர் சொல் கேளாமல், தாங்களே தறுதலைகளாக திரிந்துவிட்டு, இறுதியில் பெற்றோர் மீது பழி போடுவார்கள். பெற்றவர்கள் சம்பாதித்து தந்த காசை படிப்பதற்கு பயன்படுத்தாமல், பயனற்றதும், தீமை தருவதுமான பொழுதுபோக்குகளில் செலவிட்டு, பெற்றவர்களைப் பழிப்பதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? மேலும், சிலர் நன்றி மறந்து தங்களை ஆளாக்கிய பெற்றோருக்கு ஒரு வேளை கஞ்சி கூட தராமல் கொடுமை செய்வார்கள். பெற்றோரைக் கொடுமை செய்யும் பிள்ளைகள் குறித்து பத்திரிகைகளில் நிறையவே நாம் படிக்கிறோம்.
மத்திய அரசாங்கம் முதியோரின் நலன் கருதி, முதியோர் குறைதீர்ப்பு ஆணையம் ஒன்றை அமைத்து, கொடுமைக்கார பிள்ளைகளிடமிருந்து பெற்றவர்களைக் காப்பாற்றும் சட்டம் கொண்டு வருமளவுக்கு நிலைமை போய் விட்டது.
பெற்றோரைக் கொடுமை செய்யும் பிள்ளைகள், பைபிளைப் படித்திருந்தால் இப்படி செய்திருப் பார்களா?
உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக,'' என்பதும், உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவிகொடு, உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே,'' என்பதும் பைபிள் வசனங்கள்.


பெற்றோரை மதிக்காமல் அகால மரணம் அடைவதை விட, அவர்களை மதித்து ஆயுளை அதிகரித்துக் கொள்வதுடன், ஆண்டவரின் ஆசிர்வாதத்தையும் பெறுவோம். நம் அன்புக்குழந்தைளுக்கு இந்த வசனங்களை கற்றுத்தந்து, இளமையிலேயே பெற்றோரைக் காப்பாற்றும் நல்லெண்ண விதையை ஊன்றுவோம்.


மூன்று முத்தான வசனங்கள்


* மூச்சு உள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக.


*வாலிபர்களே, கன்னி பெண்களே, கிழவர்களே, குழந்தைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.


* கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்கு திறக்கப்படும்.

உயிரை அழித்த பணத்தாசை

பணம்... பணம்... பணம்... இதை விட்டால், இந்த பூமியில் வேறு சொல்லே காதில் கேட்கவில்லை. ஒரு பெண் தன் கணவர் தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த பணத்தை கஷ்டப்பட்டு சேமித்தாள். இதை ஒரு வங்கியில் இரட்டிப்பாகும் வகையில் போட்டு வைக்க கணவர் அறிவுறுத்தினார். அப்போது அவளது தோழி அவளைச் சந்தித்தாள். இதை வங்கியில் போட்டால், இரட்டிப்பாக எட்டாண்டுகள் காத்திருக்க வேண்டுமே! என்னிடம் கொடு. மூன்றே ஆண்டில் இரட்டிப்பாக்கித் தருகிறேன், எனச் சொல்லி, மூன்று மாதங்கள் வரை மாதம் பத்து சதவீத வட்டி கொடுத்தாள்.

இவளுக்கோ ஆசை அதிகமானது. தன் கணவருக்குத் தெரியாமல், தன் நகைகளை விற்று, அந்தப் பணத்தையும் தோழியிடம் கொடுத்தாள். அடுத்த மூன்று மாதமும் வட்டி வந்தது. மறுமாதம் வட்டி வரும் தேதியில் தோழியைக் காணவில்லை. வீட்டில் போய் பார்த்தால் கதவு மூடியிருந்தது. விசாரித்ததில், அவள் குடும்பத்துடன் இதே போல பலரிடமும் பணம் பெற்றுக் கொண்டு, ஊரைக் காலி செய்து விட்டு ஓடியது தெரிய வந்தது. இவள் நொறுங்கிப் போனாள். கணவரிடம் என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாள்.

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது, என்ற பைபிள் வசனத்தை படித்திருந்தாலும், அதை ஒதுக்கிவிட்டு தன் இஷ்டத்துக்கு நடந்ததால், அவளுக்கு இந்தக் கதி ஏற்பட்டது. பணத்தாசை கூடவே கூடாது. அது உயிரை வாங்கி விடும். கவனம், கவனம்!

உருக்கமான பிரார்த்தனை

ஒரு ஊழியர் தன் நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு தேவ ஊழியம் செய்யச் சென்றார். தன்னால் ஆன பிரயத்தனங்களைச் செய்து பார்த்தார். யாருமே தேவனைப் பற்றி கேட்க வரவும் இல்லை. வந்து கேட்ட ஓரிருவரும் அதை ஏற்கவும் இல்லை. தன் முயற்சி தோல்வியடைந்ததால், சொந்த நாட்டுக்கே திரும்பி விட முடிவெடுத்தார் ஊழியர்.

தன் நண்பருக்கு கடிதம் எழுதினார். நண்பரிடமிருந்து பதில் வந்தது. நண்பரே! முதலில் நீர் தேவனிடம் உமது பணி சிறக்க வேண்டுமென வேண்டிக் கொள்ளும். உமது வேண்டுதலை கண்ணீருடன் செய்யும். உமது உருக்கமான பிரார்த்தனையை கடவுள் நிச்சயம் ஏற்பார், என்று எழுதியிருந்தார். பைபிளில் உள்ள ஒரு வசனத்தையும் அவர் குறித்திருந்தார். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது, என்பதே அந்த வசனம். அந்த வசனத்தை திரும்பத் திரும்ப படித்த அவர், கண்ணீருடன் இயேசுவிடம் வேண்டினார். கர்த்தர் அதை ஏற்றார். பின்னர் சபைக்கு ஏராளமானோர் வந்தனர். அவர்கள் கர்த்தரின் கருத்துக் களைக் கேட்டனர். அங்கே சமாதானம் நிலவியது. உருக்கமாக பிரார்த்திக்கும் ஒவ்வொருவரின் ஜெபத்தையும் கர்த்தர் ஏற்கிறார்.அதற்குரிய பலனைத் தருகிறார்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு

வம்புக்காரர்களிடம், வாக்குவாதம் செய்யாமல், விலகிச் செல்வதே நல்லது என்கிறது பைபிள். ஒரு ஆட்டுக்குட்டி, தன் தாயைப் பிரிந்து காட்டில் வழிதெரியாமல் போய்விட்டது. கடும் களைப்பால் தாகம் மேலிட, ஒரு ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. அப்போது ஒரு ஓநாய், "ஏய் ஆடே! ஏன் தண்ணீரை கலக்குகிறாய்?" என்றது. வம்புக்கார ஓநாய், தன்னை அடித்து தின்னவே வந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்ட ஆட்டுக்குட்டி, "நீ அந்தப் பக்கமாக நின்று தானே தண்ணீர் குடிக்கிறாய்? நீ குடித்த தண்ணீரின் மிச்சம் தானே நான் நிற்கும் இடத்திற்கு வருகிறது? அப்படியிருக்க, நான் தண்ணீரைக் கலக்குவதாக சொல்கிறாயே?" என்றது.
"அதெல்லாம் இல்லை. நீ எங்கு நின்றாலும், தண்ணீரைக் கலக்கத்தான் செய்கிறாய்," என்று வம்பிழுத்த ஓநாய், "ஐயையோ! இங்கே நான் சாப்பிட வளர்த்திருந்த புல்லைத் தின்று விட்டாயா?" என்று கத்தியது.
"நீ புல் சாப்பிடமாட்டாயே. அது எங்கள் உணவல்லவா? நீ இறைச்சி சாப்பிடுபவன் ஆயிற்றே," என்று பயத்துடனும் பணிவுடனும் ஆட்டுக்குட்டி சொன்னது. உடன் ஓநாய், "சரியாகச் சொன்னாய். இதோ பார்! உன்னை அடித்து சாப்பிடுகிறேன்," என்று பாயவும், ஒரு அம்பு ஓநாயின் மீது தைக்கவும் சரியாக இருந்தது. அது, அலறியபடியே உயிரை விட்டது. ஆட்டின் சொந்தக்காரன், ஆட்டைத் தேடி அங்கு வர, ஓநாய் அதன் மீது பாய்வதைப் பார்த்து, அம்பெய்து அதைக் கொன்று விட்டான். ஓநாயிடம் நெருங்கிச் சென்று வாக்குவாதம் செய்யாத ஆடு தப்பியது.
"வாக்குவாதம் செய்ய வேண்டாம், அதனால், கேட்கிறவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய ஒரு பலனுமில்லை," என்ற பைபிள் வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.

கடவுளுக்கு நன்றி சொல்வோம்

ஒரு பங்களாவில், அதன் உரிமையாளரும் அவரது பேரக்குழந்தைகளும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. "தாத்தா! குழம்பு காரமாக இருக்கிறதா?" என்று கேட்டனர் விபரம் தெரியாத குழந்தைகள்.
தாத்தா அவர்களிடம், "என் அன்பு செல்வங்களே! இந்த உணவு மிகவும் சுவையாக இருக்கிறது. ஒரு காலத்தில் எங்கள் ஓலை வீட்டில் எந்த வசதியும் கிடையாது. உடைந்த தட்டு இருந்தால் கூட அதிலாவது சாப்பிட்டிருக்கலாம். அது கூட இல்லாததால், சிமென்ட் தரையைக் கழுவி அதில் சாப்பாடு போடுவாள் அம்மா. நான் அதைச்சாப்பிடுவேன். ஆனால், இப்போது அவள் இல்லை. அவளது மகனான நான் இவ்வளவு பெரிய பங்களாவில், வெள்ளித்தட்டில் நெய்ச்சாதம் போட்டு, அதையும் இந்த விலை உயர்ந்த மேஜையின் மீது வைத்து சாப்பிடுகிறேன். இந்த வளர்ச்சிக்கு காரணம் யார் என்று எண்ணினேன். என் தாய், தந்தைக்கு செய்யாத கிருபையை கர்த்தர் எனக்கு செய்துள்ளார். என் இளவயது நிலையை நினைத்துப் பார்த்தேன். கண்கள் நன்றியை கண்ணீராக கொட்டுகின்றன," என்றார். அன்பு இதயங்களே! நம் பழைய நிலைமையை எக்காரணம் கொண்டும் மறந்து விடக்கூடாது. அதில் துளியளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், அது கடவுளால் கிடைப்பது. அந்நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்கக்கூடாது.
"நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது," என்கிறது பைபிள்.

100 மார்க் வேண்டுமா?

ஒரு மனிதன் இறந்தவுடன் பரலோகத்துக்கு (சொர்க்கம்) சென்றான். வாசலில் தேவதூதன் தடுத்து நிறுத்தி, ""இதன் உள்ளே செல்ல உனக்கென்ன தகுதியிருக்கிறது என்பதை பத்து வாக்கியங்களில் சொல்லிவிட்டு போக வேண்டும். நீ சொல்வது எனக்கு திருப்தியாகி 100 மார்க் வாங்கினால் தான் உள்ளே அனுமதிப்பேன் ,'' என்றான்.
அந்த மனிதன், ""நான் ஞாயிறுதோறும் ஆலயம் போவேன்,'' என்றதும், தூதன் 2 மார்க் போட்டான். காணிக்கை கொடுப்பேன் என்றதும் 3 மார்க் கிடைத்தது. குழந்தைகளுக்கு இயேசுவைப் பற்றி கதைகள் சொல்வேன் என்றதும் 5 மார்க் கிடைத்தது. இப்படியே பதில் சொல்லியும் 20 மார்க்கை தாண்டவில்லை. ஒன்பதாவது பதில் முடிந்ததும், பயந்து போன அந்த மனிதன், ""ஐயா! இயேசு என் பாவத்தை ஏற்று ஏற்கனவே ரத்தம் சிந்திவிட்டார், எனவே நான் பாவமற்றவன். இந்த ஒரு தகுதியே நான் முழுமார்க் பெற தகுதியாகும்,'' என்றதும், சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன. ஆம்...இயேசுவை விசுவாசிக்க வேண்டும். அவரது கருத்துக்களை மதித்து வாழ வேண்டும். சமாதானம், கடவுள் மீதான விசுவாசம்..இன்னும் பைபிளில் சொல்லப் பட்டுள்ள நற்கருத்துக்களை மதித்து, பாவம் செய்யாமல் எவர் வாழ்கிறாரோ, அவர் பூமியில் நூற்றுக்கு நூறு மார்க் பெற்று, பரலோகத்தில் எளிதில் நுழைவார்.

ஏமாற்றி பிழைக்கக்கூடாது

இருவர் ஒரே ஊரில் துணி வியாபாரம் செய்தனர். ஒருவன், வெளி மாநிலத்தில் இருந்து தரம் குறைந்த துணியை வாங்கிவந்து, சூபிரபலமான துணி' என்று பொய் சொல்லி அதிக விலைக்கு விற்றுக்கொண்டிருந்தான். அவனது பேச்சில் மயங்கியவர்கள் விலையை பார்க்காமல், துணி வாங்கினர். குறுகிய காலத்திலேயே அவன் பெரும் செல்வந்தன் ஆனான். பணம் வந்ததும், தீய செயல்களையும் செய்ய துவங்கிவிட்டான். இன்னொருவனோ, உள்ளூர் துணிகளை நியாயமான லாபத்திற்கு விற்று தன் வாழ்க்கையை சீராக நடத்தி வந்தான். நாட்கள் ஓடியது. தரம் குறைந்த துணியை வாங்கிய மக்கள், அது விரைவில் கிழிந்ததால், செல்வந்தனின் கடையை முற்றுகையிட்டனர். அவனை அதிகாரிகள் கைது செய்தனர். அவனது குடும்பம் நடுத்தெருவிற்கு வந்தது. "பொய் சொல்லி திரட்டும் பெரும் செல்வமானது. சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீண் மூச்சே ஆகும். வெறும் பகட்டின் மூலம் சுலபமாய் சேர்த்த செல்வம் விரைவிலே குறைந்து போகும். ஆனால், உழைப்பின் மூலம் சிறுகச்சிறுக சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குவான். எரிக்கும் உஷ்ணத்துடன் சூரியன் உக்கிரமாக உதயமான வுடனேயே புல் பூண்டு மீது பட்டு அது உலரவே, பூ உதிர்ந்து அதன் அழகான வடிவம் அழிந்து போகிறது. அதுபோலவே, செல்வந்தனும் தன் போக்குகளினாலேயே வாடிப் போகிறான்," என்ற பைபிள் வசனங்கள் பணத்தின் மீது ஆசை கொண்டு தீய செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகின்றன.

ஊருக்கு மட்டும் போதனையா?

சில பிரசங்கிகள் பைபிளில் இயேசுகிறிஸ்துவால் சொல்லப்பட்டுள்ள அத்தனை கருத்துக்களையும் மேடையில் முழங்குவார்கள். ஆனால், நடைமுறையில் எப்படி எப்படியோ நடந்து கொள்கின்றனர். ஊருக்குச் செய்யப்படும் உபதேசம் தங்களுக்கல்ல என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால், ஒரு இளைய போதகரின் கதையைக் கேளுங்கள். அவர் ஒருநாள் நியூயார்க் நகர பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்தார். ஒரு டாலர் கொடுத்து தான் செல்ல வேண்டிய ஊருக்கு டிக்கட் எடுத்தார். கண்டக்டர் அவருக்கு சில்லரை தரும் போது, சற்று அதிகமாகக் கொடுத்து விட்டார். போதகர் பணத்தை எண்ணிப்பார்த்தார். கூடுதலாக பத்து பென்ஸ் இருந்தது. இந்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காவிட்டாலும் கூட, போக்குவரத்து துறைக்கு நஷ்டம் வந்துவிடப்போவதில்லை என்று முதலில் நினைத்தார். பின்னர், முதல்நாள் ஒரு கூட்டத்தில், "பிறரை குறைத்தோ, கூட்டியோ ஏமாற்றுவது சரியல்ல' என்று பிரசங்கம் செய்தது நினைவுக்கு வந்தது.


உடனே கண்டக்டரை அழைத்து பத்து பென்ஸைக் கொடுத்து விட்டார். கண்டக்டர் புன்னகையுடன், ""இந்த பணத்தை வேண்டுமென்றே தான் உங்களுக்கு அதிகமாகக் கொடுத்தேன். நீங்கள் பிரசங்கித்தபடி நடந்து கொள்கிறீர்களா என்று சோதிக்கவே அவ்வாறு செய்தேன். என் சோதனையில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள்,'' என்றார்.


பணத்தைத் திருப்பிக் கொடுத்ததன் மூலம், அந்தப் போதகர் தனது பேச்சும் செயலும் ஒன்று என்பதை நிரூபித்துக் கொண்டார்.


"திரளான ஐசுவரியத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளப்படத்தக்கது,'' என்ற பைபிள் வாசகமே அவரை இவ்வாறு செய்யத் தூண்டியது.

கடவுளைப் புரிந்து கொள்வது கடினம்

மலைவாசி ஒருவன், ஒருநாள் மலையிலிருந்து கீழே இறங்கிவந்தான். முதன்முறையாக அடிவாரத்திற்கு வந்த அவனை அவனது நண்பன் பல இடங்களுக்கும் அழைத்து சென்றான். கடைசியாக அவர்கள் கடற்கரைக்கு வந்தனர். கடலைப் பார்த்ததும் மலைவாசிக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அவன் அதுவரையிலும் கடலைப் பார்த்ததே இல்லை. முதலில் அவனுக்கு பயமாக இருந்தாலும் கடல் அலைகள் அவனது பாதத்தை வருடியதும் பரவசம் அடைந்தான். தண்ணீரில் குதித்து மகிழ்ந்தான். சிறிது நேரம் குளிக்கவும் செய்தான்.


கடலின் முடிவில் வானமும் கடலும் சேர்வது போன்ற தோற்றம் இருந்தது. வானம் எப்படி கடலோடு இணைகிறது என ஆச்சரியமாக கேட்டான். இவ்வளவு தண்ணீர் இங்கே எப்படி வந்து தேங்கியது என சிந்திக்க ஆரம்பித்தான். எல்லாமே புரியாத புதிராக இருந்தது. நீண்ட நேரமாக கடலின் அழகை ரசித்துவிட்டு, ஒரு சின்ன ஜாடியில் கடல் நீரை ஊற்றி நிரப்பினான். அதைப்பார்த்த நண்பன், ""ஏன் தண்ணீரை நிரப்புகிறாய்?'' எனக் கேட்டான்.


""கடல் என்றால் என்னவென்றே தெரியாத என் மனைவி, குழந்தைகளுக்கு இந்த தண்ணீரை கொண்டுபோய் காட்டப்போகிறேன்,'' என்றான்.


உலகத்தில் உள்ள அனைவருமே கடவுளை மிகச்சிறியவராக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஜாடி கடல் நீர் கடலாகிவிட முடியாது. பரிசுத்த ஆவியான கடவுளும் கடலை போன்றவர். அவரை நமது குறுகிய அறிவால் புரிந்துகொள்ள முடியாது. அவரைப் பற்றி எத்தனை புத்தகங்கள் எழுதினாலும், எவ்வளவுதான் பேசினாலும் அது கடல் தண்ணீரை ஜாடியிலே மொண்டு கொண்டுபோன கதையாகத்தான் இருக்கும். கடவுளை புரிந்துகொள்வது என்பது மிகவும் அரிதான செயல்.

அவரை மட்டுமே நம்புங்கள்!

அமெரிக்காவில் வசித்த மரியன் என்ற நீக்ரோ பெண்மணிக்கு இசையில் நிறைய ஆர்வம் உண்டு. கருப்பு இனத்தவர் பாடல் கற்றுக் கொள்வதையோ, மேடையில் பாடுவதையோ உயர் இனத்தினர் விரும்பவில்லை. இதற்காக அவர் கண்ணீர் வடித்தார். மரியனின் தாய் மகளிடம், ""நீ கவலைப்படாதே. நாம் நினைப்பது நடக்கவேண்டும் என்று நம்பிக்கை கொள்வதில் தவறில்லை. அந்த நம்பிக்கை செயல்வடிவம் பெறவில்லை என்றால், ஆண்டவருக்கு அதில் விருப்பமில்லை என்று பொருள். நீ உன்னை நம்புவதை விட, கடவுளை நம்பு. அவருக்கு விருப்பமிருந்தால், எந்த சக்தியும் நீ பாடகியாவதைத் தடுக்க முடியாது,'' என்றார்.மரியனும் ஆண்டவரை ஜெபித்து வந்தார். அவரது ஜெபம் ஆண்டவரை எட்டியது. ஒரு இசையாசிரியர்மரியனை தனது மாணவியாக ஏற்றுக் கொண்டார். இசையைக் கசடறக் கற்றார். ஒரு ஈஸ்டர் தினத்தன்று மரியமின் இசை நிகழ்ச்சி ஆபிரகாம்லிங்கன் மண்டபத்தில் அரங்கேறியது. மண்டபத்தில் திரண்டிருந்த 75 ஆயிரம் ரசிகர்களும் அவரது இசை கேட்டு எழுப்பிய கரகோஷத்தால் விண்ணைப் பிளந்தது.மரியன் ஆனந்தண்ணீர் வடித்தார்.""மனுஷரை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்'' என்ற பைபிள் வசனம் உண்மை என்பது இப்போதாவது புரிகிறதா?

எல்லாம் கடவுள் சித்தம்

இரண்டு நண்பர்கள் விமானத்தில் வெளிநாட்டுக்கு புறப்பட்டனர். விமானம் பறந்து கொண்டிருந்த போது, இரண்டு பேர் எழுந்து, தாங்கள் தீவிரவாதிகள் என்றும் விமானத்தை கடத்தப்போவதாகவும் அறிவித்து எங்கோ கடத்தி சென்றனர். விமானக்கம்பெனியிடம், விமானத்தை விடுவிக்க பலகோடி ரூபாய் கேட்டனர். அப்போது ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம்,""விமானம் கடத்தப்பட்டதால் நாம் வெளிநாட்டில் பலகோடி நஷ்டமடைவோம். நமது வியாபாரம் என்னாகப்போகிறதோ?'' என்றார். அதற்கு அந்த நண்பரோ,""எல்லாம் கடவுள் சித்தம். கடவுள் மீது நம்பிக்கை உடையவர்கள் எதற்காகவும் அஞ்ச வேண்டியதில்லை,''என்றார். ஒரு வழியாக விமானத்தை அதிகாரிகள் மீட்டனர். விமானம் மீண்டும் பறக்க ஆரம்பித்தது. வெளிநாடு சென்றதும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். அங்கே பெரும் கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் தங்கவிருந்த ஓட்டல் பூகம்பத்தில் சிக்கி நொறுங்கி கிடந்தது. பலர் இறந்து போயிருந்தார்கள். திட்டமிட்ட நாளிலேயே, அவர்கள் அங்கு வந்து சேர்ந்திருந்தால் அவர்களும் இறந்தவர்கள் பட்டியலில் இருந்திருப்பார்கள். நண்பரின் வார்த்தைகளை மற்றொரு நண்பர் அசைபோட்டு பார்த்தார். "கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திட நம்பிக்கை உண்டு' என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுளுக்கு அஞ்சி, அவர்மீது தீவிர நம்பிக்கை கொள்பவர்களுக்கு, கெட்டது நடப்பது போல தோன்றினாலும், முடிவில் மிகுந்த நன்மையே கிடைக்கும் என்பது உறுதி.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

ஒரு மர வியாபாரியும், இரும்பு வியாபாரியும் நண்பர்களாக இருந்தனர். இரும்பு வியாபாரிக்கு வியாபாரம் அதிகமானது. அதனால் அவர் தனது வீட்டை விரிவாக்கம் செய்ததுடன், ஏராளமான பொருட்களையும் வாங்கி குவித்தார். மர வியாபாரிக்கோ அந்த அளவுக்கு வருமானம் இல்லை. எனவே தன் நண்பன் மீது பொறாமை ஏற்பட்டது. காலப்போக்கில், அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டது. ஒருமுறை, இரும்பு வியாபாரி வெளியூர் சுற்றுலா கிளம்பினார். தன் நண்பரிடம் கடையை ஒப்படைத்து வியாபாரத்தை கவனித்து கொள்ளும்படி சொல்லி சென்று விட்டார். இதுதான் சமயம் என காத்திருந்த மர வியாபாரி கடையில் இருந்த எல்லா இரும்புகளையும் விற்று ஒட்டு மொத்த பணத்தையும் அபகரித்து கொண்டார். ஊரிலிருந்து திரும்பிய இரும்பு வியாபாரி பணத்தை தரும்படி கேட்டார். தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்றும், இரும்பை எலிகள் தின்று விட்டதாகவும் சொல்லி விட்டார். ஏமாற்றமடைந்த இரும்பு வியாபாரி நீதிமன்றத்திற்கு சென்றார்.
நீதிபதியிடம் மரவியாபாரி எலிகள் தான் இரும்பை தின்றன என அடித்துப்பேசினார். நீதிபதியும் அதை ஒப்புக்கொள்வதைப் போல் நடித்தார். இதனால் விரக்தியடைந்த இரும்பு வியாபாரி, ஒரு விழாவிற்கு மர வியாபாரியின் மகனையும் அழைத்து சென்று ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டார். மர வியாபாரியிடம், "விழாவுக்கு போன இடத்தில் உன் மகனை கழுகு தூக்கிசென்று விட்டது' என கூறினார்.


பதட்டமடைந்த மர வியாபாரி, நீதிமன்றத்திற்கு சென்றார். பத்து வயது மகனை கழுகால் எப்படி தூக்க முடியும் என வாதிட்டார். "இரும்பை எலி தின்னுமானால், பத்து வயது சிறுவனை கழுகு தூக்கி செல்லாதா?' என நீதிபதி திருப்பி கேட்கவும், புத்தி வந்த மரவியாபாரி, நீதிபதியிடமும் நண்பரிடமும் மன்னிப்பு கேட்டு பணத்தை திருப்பிக்கொடுத்தார். மர வியாபாரியும், இரும்பு வியாபாரியின் மகனை திரும்ப ஒப்படைத்தார். பைபிளில் "மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்' என்ற வசனம் இருக்கிறது. இதை மனதில் கொண்டு, நமது செயல்பாடுகளை திருத்தி கொள்ள வேண்டும்

ஆண்டவர் மீது நம்பிக்கை வையுங்கள்

இங்கிலாந்தைச் சேர்ந்த போதகர் ஜியார்ஜ் முல்லர், ஒரு கப்பலில் குவபெக் நகருக்கு சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த நகரை அடைய வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. ஆனால், செல்லும் வழியில் பனி மூட்டத்தால் கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.


முல்லர் கேப்டனிடம் சென்று,""நீங்கள் கப்பலை கிளப்புங்கள். நான் சனிக்கிழமைக்குள் அங்கு இருந்தாக வேண்டும் என்று சொன்னார்.


கேப்டன் சிரித்தார். ""நீங்கள் வெளியே போய் பாருங்கள். பனி மூட்டத்தில் கண்ணே தெரியவில்லை. இப்போதிருக்கும் சீதோஷ்ண நிலையைப் பார்த்தால் இன்னும் 10 மணி நேரத்திற்குள் கடலே உறைந்து போகும் அளவுக்கு குளிர் இருக்கிறது. எனவே நீங்கள் சொல்வது சாத்தியமில்லை,'' என்றார்.


முல்லர் அவரிடம்,""நான் 57 ஆண்டு காலமாக இந்த வழியில் பயணித்து கொண்டிருக்கிறேன். ஒருமுறை கூட நான் சொன்ன நேரத்தில் போகத்தவறியது இல்லை. இப்போதும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதற்குரிய வழியை உண்டாக்குவார்,''என்று சொல்லி கேப்டனை அழைத்து கொண்டு ஒரு அறைக்குள் சென்றார். ஜெபிக்க ஆரம்பித்தார். இப்போதும் கேப்டன் அவரிடம்,""உங்கள் ஜெபத்தால் நேரந்தான் வீணாகும். பயன் ஏதும் இருக்கப்போவது இல்லை. இந்த கடல் பயணம் பற்றி அனைத்தும் நான் அறிவேன்,''என்றார்.


முல்லர் சற்றும் கவலைப்படாமல்,""நீங்கள் சொல்வது பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் எல்லா சுற்றுச்சூழல்களையும் தம்முடைய ஆளுகைக்குள் வைத்து நடத்தும், ஜீவனுள்ள ஆண்டவரை எனக்குத் தெரியும். நான் அவரை நம்பியே ஜெபிக்கிறேன்,''என சொல்லிவிட்டு தொடர்ந்து ஜெபித்தார். சற்று நேரத்தில் பனிமூட்டம் விலகியது. கேப்டன் ஆச்சரியப்பட்டார். கடவுளால் ஆகாதது ஏதுமில்லை என்பதையும், அவர்மீது நம்பிக்கையுடன் ஜெபித்தால் எல்லாமே சாத்தியம் என்பதை அறிந்து, தன் வாழ்க்கையிலும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்.

ஜெபத்தின் மீது நம்பிக்கை

ஒரு ஆலயத்தின் அருகில் மதுக்கடை திறக்க ஒரு பிரமுகர் ஏற்பாடு செய்து பணியைத் துவக்கினார். சபை அங்கத்தினர்கள் எதிர்த்தனர். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. சபையார் ஒன்றுகூடி, அங்கே அந்தக்கடை வராமல் இருக்க உபவாசமிருந்து ஊக்கமாய் தேவனிடம் ஜெபித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்த பாடில்லை.


இதற்குள் கட்டட வேலை முடிந்து விட்டது. திறப்புவிழா அறிவிப்பு வெளியிடப் பட்டது. அங்கத்தினர்கள் திகைத்து நின்றார்கள். எனினும், ""இதை தடுத்து நிறுத்த உமக்கு வல்லமையுண்டு. நாங்கள் விசுவாசிக்கிறோம்'' என்று மேலும் ஊக்கமாக ஜெபித்தார்கள். திறப்புவிழாவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக பெரும் மின்னலுடன் காற்றும் மழையும் ஏற்பட்டது. அந்த புதிய கட்டடத்தை இடி தாக்கி சரிந்தது. சபையாருக்கு மிகவும் சந்தோஷம். தங்களது ஜெபத்திற்கு இரங்கி, தேவனே நேரடியாகத் தலையிட்டு பெரிய காரியங்களைச் செய்தார் என மகிழ்ந்தனர். உடனே கடை <உரிமையாளர், ""இவர்களது ஜெபமே எனது கடை பாழ்பட காரணமாக இருந்தது. இதற்கு இவர்கள் இழப்பீடு தர வேண்டும்,'' என சபையார் மீது வழக்கு தொடர்ந்தார். சபையாரோ இவரது கட்டடம் நாசமாக எங்களது ஜெபம் எந்த வகையிலும் பொறுப்பல்ல'' என பதில் அறிக்கை கொடுத்தனர்.


உடனே நீதிபதி சபையாரிடம், ""அப்படியானால், மதுக்கடை உரிமையாளருக்கு உங்கள் ஜெபத்தின் மீதிருக்கும் நம்பிக்கை, உங்களுக்கு இல்லை... அப்படித்தானே,'' என்று சபையாரைக் கேட்டார்.


""எங்களது ஜெபத்தின் வல்லமையால் தேவன் இப்படி செய்தார் என்று சொல்ல முடியாதது கோழைத்தனம் இல்லையா? இது வேலைக்காரப் பெண் முன்பாக பேதுரு இயேசுவை மறுதலித்தது போல் இருக்கிறது.


""மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின்முன்பாக மறுதலிப்பேன்,'' என்கிறார் இயேசுநாதர்

தகுதியானவர்களே வேலைக்கு தேவை


ஒரு பணியைச் செய்ய வேண்டுமானால், அதற்குரிய தகுதியை முழுமையாகப் பெற்றவர்களாலேயே முடியும். ஆண்டவர் அவரவர் இன்னின்ன பணிகளையே செய்ய முடியும் என ஏற்கனவே நிர்ணயித்தே நம்மை பூமியில் பிறக்கச் செய்கிறார். ஒரு நாட்டில் மந்திரி ஒருவர் இருந்தார். அவர் மிகுந்த புத்திசாலி. ராஜாவுக்கு என்ன பிரச்னை வந்தாலும் அதற்குரிய தீர்வைத் தெளிவாகச் சொல்லி விடுவார். இதனால், ராஜாவுக்கு மந்திரி மேல் பிரியம் அதிகம். அந்த மந்திரிக்கு ஒரு தம்பி இருந்தார். அவர் ஒரு விவசாயி. தன் மந்திரி அண்ணன், உழைப்பே இல்லாமல் நிறைய சம்பாதிக்கிறானே என்று அவருக்குப் பொறாமை. ஒருநாள், தன் அண்ணனிடம், ""நீ கொஞ்சநாள் விவசாயத்தைப் பார். எனக்கு மந்திரி பதவி வாங்கிக்கொடு<,'' என்றான். மந்திரியும் ராஜாவிடம் கடும் சிபாரிசு செய்து தம்பியை மந்திரியாக்கி விட்டார். ஒருநாள் சாலையில் சில வண்டிகள் சென்றன. "எத்தனை வண்டி போகிறது?' என ராஜா பார்த்து வரச்சொன்னார். இவர் ஓடிப்போய் பார்த்து விட்டு பத்து வண்டி போகிறது,'' என்றார். "வண்டியில் என்ன இருக்கிறது?' என்றார். இதை புது மந்திரி கவனிக்கவில்லை. மீண்டும் ஓடிப்போய் பார்த்து வந்து "நெல் மூடை போகிறது' என்றார். "அது என்ன விலை?' என்று ராஜா கேட்க, புது மந்திரி திரும்பவும் ஓடிச் சென்று பதில் வாங்கி வந்தார். இப்படி பல கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் ஓடிச்சென்றார்.அப்போது பழைய மந்திரி தற்செயலாக வந்தார்.


""ராஜா! பத்து வண்டிகள் நம் அரண்மனையைக் கடந்தன. அதில் 200 மூடை நெல் பாண்டியநாட்டுக்குப் போகிறது. நம் சோழ நாட்டில் மூடைக்கு ஐந்து ரூபாய். அங்கே ஏழு ரூபாய் என்பதால், லாபம் கருதி அங்கே விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள்<'' என தெளிவாகச் சொன்னார். புதுமந்திரி தலை குனிந்தார்.


""நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்கள்'' என்ற பைபிள் வசனப்படி, அவரவருக்கு என விதிக்கப்பட்ட பணிகளை சரியாகச் செய்தாலே வாழ்வில் வெற்றி பெற்றுவிடலாம்

அனைவரையும் உபசரிப்போம்

பழத்தோட்டம் ஒன்றில் பணிசெய்து வந்த ஒருவரைப் பற்றி, அவ்வூர் மக்கள் அறிந்து கொள்ள முயன்றனர். அவரது பெயர், ஊர், தேசம் எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை. யாராவது அவரைப் பற்றி விசாரிக்க வந்தால், அவர் தோட்டத்தில் இருக்க மாட்டார். எங்காவது மறைந்து கொள்வார். ஒருநாள், ஒரு சிறுவன் அவர் பணிசெய்த தோட்டத்துக்குள் வேலி தாண்டி புகுந்தான்.

அங்கிருந்த ஆப்பிள் மரங்களில் இருந்த சில பழங்களைப் பறித்து கால் சட்டைப் பையில் திணித்தான். அப்போது, தோட்டத்தில் பணி செய்தவர் அங்கு வந்துவிட்டார். பையனை எட்டிப் பிடித்தார். உடன் வந்த சிறுவர்கள் சிலர் வெளியே நின்றனர். அவர்கள், தங்கள் நண்பன், அவரிடம் உதைபட போவது உறுதி என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் அவனிடம், ""தம்பி! எதற்காக இப்படி திருட்டுத்தனமாக உள்ளே புக வேண்டும். உனக்கு பழங்கள் வேண்டுமானால் என்னிடம் கேட்டிருக்கலாமே! இந்தா! இன்னும் பழங்கள் தருகிறேன்,'' என்று சொல்லி, ஒரு பை நிறைய பழம் பறித்துக் கொடுத்தார். பயத்துடன் நின்ற அவன், கண்ணீர் வடித்து மன்னிப்பு கேட்டான். அவர் அவனைத் தேற்றி, ""வெளியே நிற்கும் உன் நண்பர்களுக்கும் இதைக் கொடு. <உங்களுக்கு பழம் வேண்டுமானால், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அனைவருமே உ<ள்ளே வரலாம். எல்லோருக்கும் பழம் தருவேன்,'' என்று உறுதிமொழியும் கொடுத்தார். சிறுவனுக்கு ஒரே சந்தோஷம். வெளியில் நின்றவர்களும் மகிழ்ந்தனர்.

மறுநாள் முதல் அவர்கள் தோட்டத்துக்கு மகிழ்ச்சியுடன் வர ஆரம்பித்தார்கள். அவர்களை மரத்தடியில் அமரச்செய்து பழங்கள் தந்ததுடன், இயேசுவின் போதனைகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார் அந்த தோட்டக்காரர். இது அவ்வூர் பெரிய மனிதர்களுக்கு தெரிய வந்தது. அவர் வாழ்ந்த நாடு நாத்திகத்தில் நாட்டமுடையது. தங்கள் தேசத்தில் இப்படி ஒரு ஆன்மிக பிரசாரம் நடப்பதை அரசுக்கு அறிவித்தனர்.

அரசாங்கம் தோட்டக்காரரைக் கைது செய்ய காவலர்களை அனுப்பியது. அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தனர். ஆனால், தோட்டக்காரர் சிறையிலிருந்தும் மறைந்து விட்டார். அதன்பிறகு அவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவர் தேவதூதனாக விண்ணில் இருந்து அனுப்பப்பட்டவர் என்ற விபரம்...பாவம், அவர்களுக்கு எப்படி தெரியும்?

""அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதனாலே சிலர் அறியாமல் தேவதூதரையும்உபசரித்ததுண்டு,'' என்கிறது பைபிள். அந்த தேவதூதரை தண்டிக்காமல் உபசரித்திருந்தால், அந்த நாடு பல பலன்களைப் பெற்றிருக்கும். அதை இழந்தது அவர்களின் கடவுள் நம்பிக்கையின்மையால் தான்! எனவே எல்லோரையும் தேவதூதர்களாகக் கருதி உபசரிக்க பழக வேண்டும்.

Sunday, November 29, 2009

மனதை மாற்றிய வசனம்

"பாவத்தின் சம்பளம் மரணம்'.... இந்த வசனத்தை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, எல்லா மதத்தினருமே அறிவார்கள். இந்த வசனம் ஒரு நாத்திகரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய கதை தெரியுமா?


இங்கிலாந்தில் சார்லஸ் பின்னி என்பவர் நாத்திகவாதக் கருத்துக்களில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். நாத்திகம் பற்றி உரையாட, இவருடன் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். நாத்திகத்தில் பெரிய விமர்சகராகி, நாடெங்கும் புகழ் பெற்றார். இந்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய பின்னி, பைபிளில் வேண்டுமென்றே குறைகளைக் கண்டுபிடித்து, மக்களிடையே சொல்ல வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டார்.


பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். ஆனால், சில நாட்களிலேயே அவரது மனதில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார். நாத்திகக் கருத்துக்களில் இருந்து வழுவுவது போன்ற தோற்றம் ஏற்பட்டது. குறிப்பாக "பாவத்தின் சம்பளம் மரணம்' என்ற வரிகள் அவரது நெஞ்சைத் தொட்டன. ""ஆம்...நான் ஒரு பாவி! இயேசுவை நான் விசுவாசிக்காமல் இருந்துவிட்டேன், அவர் பட்ட பாடுகள் எத்தனை! ரத்தம் வழிய சிலுவையில் அவர் தொங்கியது யாருக்காக... நம்மைப் போன்ற பாவிகளுக்காகத் தானே'' என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார்.


நாத்திகத்தைக் கைவிட்டு மனம் மாறிய அவர், பிரபலமான சுவிசேஷகர் ஆகிவிட்டார். நாத்திகத்தில் இருந்து ஆத்திகத்திற்கு மாறிய அவரது கருத்துக்களைக் கேட்க பெரும் கூட்டம் கூடியது. 18ம் நூற்றாண்டின் தலை சிறந்த சுவிசேஷகராக அவர் விளங்கினார்.

புத்திசாலித்தனத்தால் பதவி

ஒரு ராஜாவுக்கு மூன்று பிள்ளைகள். அவர் மகன்களை அழைத்து, ""எனக்கு வயதாகி விட்டது. மூத்தவனுக்கே ராஜ்யம் என்ற விதியை மாற்றி, அறிவுத்திறன் மிக்கவனிடம் இந்த நாட்டை ஒப்படைக்க நானும், மந்திரிகளும் முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு போட்டி வைக்கிறேன். உங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாளிகைகளில், ஏதேனும் ஒரு பொருளை சற்றும் இடைவெளியில்லாமல் நிரப்பி வைக்க வேண்டும். இதுவே போட்டி,'' என்றார்.

இரண்டு நாள் கழித்து, ராஜா மகன்களின் மாளிகைகளைப் பார்க்க மந்திரிகளுடன் சென்றார்.

முதல் மகன், ""அப்பா! என் மாளிகை முழுவதையும் சற்றும் இடைவெளியின்றி வைக்கோலால் நிரப்பியுள்ளேன்,'' என்றான். அடுத்தவன், ""என் மாளிகையை தங்கக்காசுகளால் நிரப்பியுள்ளேன். செல்வத்தைப் பாதுகாக்கத் தெரிந்த எனக்கே பதவி வேண்டும்,'' என்றான்.

மூன்றாம் மகன் வீட்டுக்குச் சென்றார் மன்னர். அங்கே எதுவுமே நிரப்பப்படவில்லை மன்னர் அவனிடம், ""உன் அண்ணன்மார் இருவரும் அரண்மனையை நிரப்பி த்துள்ளனர். நீ ஓன்றும் செய்யாமல் இருக்கிறாயே,'' என்று கோபமாக கேட்டார்.

""தந்தையே! சற்றுப்பொறுங்கள்,'' என்ற இளைய மகன், ஒரு தீப்பெட்டியை எடுத்து வந்து விளக்கேற்றினான். அரண்மனை முழுவதும் வெளிச்சத்தால் நிரம்பியது.

""இப்போது பார்த்தீர்களா! அரண்மனை வெளிச்சத்தால் நிரம்பி விட்டது. இருண்டு கிடக்கும் மக்களின் வாழ்விலும் இப்படியே ஒளியேற்றுவேன்,'' என்றான். அவனது புத்திசாலித்தனம் அனைவரையும் கவர்ந்தது. அவனுக்கே பதவி தரப்பட்டது. ""நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்,'' என்கிறது பைபிள். இருண்டு கிடக்கும் மூளையில் புத்திசாலித்தனம் என்ற விளக்கேற்றினால், வெற்றி என்றும் உங்களுடையது தான்!

கவலையில்லாத பிரதேசம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

கடும் வெயில்காலத்தில் மலைப்பிரதேசங்களில் உள்ள கோடைவாச ஸ்தலங்களுக்கு போய் சில நாட்கள் ஓய்வு எடுப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அங்கே செல்வதால், வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன், அழகிய இயற்கை காட்சிகளையும் கண்டு மகிழும் வாய்ப்பும், அதன் காரணமாக நமது கவலைகளையெல்லாம் மறக்கின்ற சூழ்நிலையும் உருவாகும். மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செல்லும் போது, உயரே செல்லச் செல்ல கடல் மட்டத்திற்கு மேல் நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதை அறிவிக்கும் அறிவிப்பு பலகைகளை காண்கிறோம். உயர உயர போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைக் காண்பதிலே ஒரு வகை மகிழ்ச்சி ஏற்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் குவின்ஸ் டவுன் என்ற நகரம் உள்ளது. இது மலை <உச்சியில் <உள்ள நகரமாகும். சுற்றுலா பயணிகள் அங்கே ஒரு வித்தியாசமான அறிவிப்பு பலகையைக் காணலாம்.

""குவின்ஸ்டவுன் உங்களை வரவேற்கிறது. நீங்கள் கவலை மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி மேலே இருக்கிறீர்கள்'' என்ற இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதாவது, எல்லா மனிதர்களும் கவலைப்படுகிறார்கள். இந்த சுற்றுலா தலத்திற்கு வந்தால் கவலைகளை மறந்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இந்த பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சுற்றுலா தலத்தைவிட்டு கீழே இறங்கியதும் மீண்டும் நமது பணிகளில் ஈடுபடுவோம். கவலைகள் மீண்டும் தொற்றிக்கொள்ளும். கவலையேபடாமல் இருக்க வேண்டு மானால் பைபிள் சொல்வதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

""உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்,'' என்று பைபிள் நமக்கு கற்றுத்தருகிறது. கர்த்தரிடம் கவலைகளை ஒப்படைத்து விட்டால், அதை மறப்பதற்கு எந்த இடத்தையும் தேடி அலைய வேண்டியதில்லை. நமது கவலைகளை அவரே ஏற்றுக் கொள்வார். எங்கிருந்தாலும் நாம் கவலையற்று வாழமுடியும்.

திறமைக்கு பரிசு

ரிப்லி என்பவர் எழுதிய "நம்பினால் நம்புங்கள்' என்ற புத்தகத்தில் ஒரு அருமையான தகவல் இருக்கிறது. அதில் ஒரு இரும்புத் துண்டு பற்றி அவர் எழுதியுள்ளார்.ஒரு சாதாரண இரும்புத்துண்டின் விலை 5 டாலர். அதையே குதிரையின் லாடமாக வடித்ததும் 50 டாலராக விலை உயர்ந்து விடுகிறது. தையல் இயந்திரமாக வடிவமைக்கும் போது அதன் விலை 500 டாலராக கூடி விடுகிறது. விலை உயர்ந்த ஸ்விஸ் வாட்சின் மெல்லிய ஸ்பிரிங்காக மாற்றியதும் அதன் விலை 5000 டாலராக ஏறிவிடுகிறது. ஆக, 5 டாலர் மதிப்புள்ள ஒரு பொருள், அதை பதனிட்டு வேறு பொருளாக மாற்றும்போது விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதுபோல நமக்கும் ஆண்டவர் ஆற்றலைத் தந்துள்ளார். அதை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். ஆண்டவர் பைபிள் மூலமாக நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி வலியுறுத்துகிறார். அதை பின்பற்றி திறமையை நல்ல முறையில் பயன்படுத்தினால் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மையாக அமையும். சாதாரண இரும்புத் துண்டு பொருளாக மாறும்போது அதன் மதிப்பு உயர்வது போல, மனிதர்களும் தங்கள் திறமையை நல்ல முறையில் பயன்படுத்தினால் சமுதாயத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

கைதிகளின் மிஷனரி

இங்கிலாந்தில் செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத்பிரை. இவரது தந்தை ஜோசப் கர்னி. இவர் கர்னிஸ் பாங்கின் பங்குதாரர். தாயார் கேதரின் பார்க்லே என்னும் பிரபல வங்கியை நடத்தி வந்த குடும்பத்தை சேர்ந்தவர். எலிசபெத்தின் 12ம் வயதில் அவரது தாயார் கேதரின் மரணமடைந்தார். தாயின் மரணம் எலிசபெத்தை வெகுவாக பாதித்தது. இவரே குடும்பத்தில் மூத்தவர் என்பதால் தனது தங்கைகளையும், தம்பியையும் கவனிக்கும் பொறுப்பு தலையில் விழுந்தது. மிகவும் சிரமப்பட்டு ஆறு வருடங்கள் வாழ்க்கையை தள்ளியபிறகு 18 வயதில் வில்லியம் சேவரி என்ற நற்செய்தியாளர் நடத்திய கூட்டங்களில் எலிசபெத் கலந்து கொண்டார்.
""பசியாயிருந்தேன், எனக்கு போஜனங் கொடுத்தீர்கள்;
தாகமாயிருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னை சேர்த்துக் கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னை பார்க்க வந்தீர்கள்,'' என்ற இயேசு கிறிஸ்துவின் நற்செய்திகளை மையமாகக் கொண்டு சேவரியின் பிரசங்கம் அமைந்தது. மேலும் இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் பாவங்களையும் அதன் விளைவான மரண தண்டனையையும் தம்மேல் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் தம் ஜீவனைக் கொடுத்தவர் என்ற செய்தி எலிசபெத்தை மிகவும் கவர்ந்தது. இயேசு கிறிஸ்துவை அவர் தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு அவரது சபை சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில், ""நீ அனேக பார்வையற்றோருக்கு ஒளியாக இருப்பாய்; அனேக ஊமையருக்கு நீ பேச்சாக இருப்பாய்; அனேக முடவருக்கு நீ கால்களாக இருப்பாய்,'' என்று ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கப் பட்டது. இதைக்கேட்ட எலிசபெத், ""இதை ஆண்டவர் எனக்காகத் தான் உரைத்திருக்கிறார்,'' என்று கூறினார். அதன்பிறகு அவரது செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
ஏழைகள், வியாதியால் பாதிக்கப்பட்டோர், சிறைக் கைதிகள் ஆகியோர் மீது அவருக்கு மிகுந்த பரிவு ஏற்பட்டது. தனது குடும்பத்தில் சேர்ந்த பழைய ஆடைகள் மட்டுமின்றி அனேகரை சந்தித்து பழைய ஆடைகளை சேகரித்து ஏழைகளுக்கு வினியோகம் செய்துவந்தார். வியாதியஸ்தர்களை சந்தித்து ஆறுதலாக பேசி பைபிளிலிருந்து சில வேத பகுதிகளை வாசித்து அவர்களுக்காக ஜெபித்தார். தனது வீட்டிலேயே ஞாயிறு பள்ளி ஊதியத்தை துவக்கினார். கல்வியறிவற்ற குழந்தைகளுக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்தார். வேத சத்தியங்களைக் கற்றுக் கொடுத்து அவர்களை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றினார்.
இங்கிலாந்திலுள்ள நியூகேட் சிறைச்சாலையை பார்வையிட்ட அவர் ஒரு சிறிய கட்டடத்தில் கைதிகள் பலர் இருப்பதை பார்த்தார். அவர்கள் சார்ந்த வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கே வராத நிலையில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். குளிப்பது, சமைப்பது, தூங்குவது என எல்லாமே ஒரே அறைதான். அவர்கள்மீது பரிவு கொண்ட எலிசபெத் அவர்களுக்கு துணிமணி, சாப்பாடு ஆகியவற்றை கொடுத்ததுடன் சிறையில் பெற்றோர்களுடன் இருந்த சிறுவர்களுக்காக ஒரு பள்ளியை துவங்கினார். அங்கிருந்த பெண்களுக்கு பைபிளில் உள்ள வாசகங்களை கற்றுக் கொடுத்தார். இவரது சிறைப்பணி காரணமாக "சிறைக் கைதிகளின்மிஷனரி' என்ற சிறப்புப் பெயரை பெற்றார்.
இங்கிலாந்தில் உள்ள பல ஆலயங்களிலிருந்து அவரை பிரசங்கிக்கும்படி அழைப்புகள் வந்தன. அவரது பிரசங்கத்தில், திக்கற்ற பிள்ளைகளும், கணவரை இழந்தவர்களும் படுகிற உபத்திரவம் பற்றியும் அவர்களுக்கு ஆறுதல் கூறுவது பற்றியும் வலியுறுத்தி பேசுவார்.
இங்கிலாந்தின் அரசியாக இருந்த விக்டோரியா மகாராணி இவரது நற்பணியை பாராட்டினார். அவர் செய்த பணிக்காக பெரும் நன்கொடையை கொடுத்தார். ஏற்கனவே எலிசபெத் செல்வச் செழிப்புடையவர். ஆனாலும் தன்னிடமுள்ள செல்வத்தை பொருட்படுத்தாமல் இறைப்பணியே முக்கியம் என கருதி இயேசு கிறிஸ்துவுக்குள் பலரை வழிநடத்தினார். 1845ல் அவர் மரணமடைந்தார். ஆண்டுகள் உருண்டோடினாலும் அவர் செய்த சமூகப்பணியும் இறைப்பணியும் இன்றும் இங்கிலாந்து மக்களால் பேசப்படுகிறது.

ஆண்டவரை நம்பினால் எதுவும் கிடைக்கும்

நியூயார்க்கில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம்.. எல்லோரையும் உலுக்கிக் கொண்டிருந்த கடும் குளிரில் ஒரு சிறுவன் கந்தல் உடையுடனும், வெறும் காலுடனும் ஒரு செருப்புக்கடையின் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது பெரும் செல்வந்தரான ஒரு பெண்மணி குதிரைகள் பூட்டிய தன்னுடைய ரதத்தில் வந்தாள். சிறுவன் குளிரில் நடுங்குவதைக் கண்டு,. அவனிடம், ""தம்பி! இங்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என கருணையோடு கேட்டாள்.


""அம்மா! குளிர் தாங்கமுடியவில்லை. நான் என் இயேசுவிடத்தில் ஒரு ஜோடி ஷ� கேட்டிருக்கிறேன். அவர் அதை எனக்கு தருவார் என நம்பி இங்கே காத்திருக்கிறேன்,'' ஒரு நிச்சயத்துடன் பதிலளித்தான். அந்த பதில் அந்த பெண்மணியை வியப்பில் ஆழ்த்தியது. ஆண்டவர்மீது அவன் கொண்ட நம்பிக்கையான விசுவாசத்தை எண்ணி பெருமிதம் அடைந்தாள். அந்த அளவுக்கு அவர் மீது தனக்கு விசுவாசம் இருக்கிறதா என்று சுயபரிசோதனையும் செய்து கொண்டாள். அவனை அழைத்துக்கொண்டு ஒரு கடைக்குள் சென்றாள்."இந்த சிறுவனுக்கு ஆறு ஜோடி உல்லன் சாக்ஸ் கொடுங்கள்' என கடைக்காரரிடம் சொன்னாள். இன்னொரு பணியாளரிடம் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீரும், ஒரு டவலும் கொண்டு வரச்சொன்னாள். அவர் அதை கொண்டுவந்தார்.


அந்தச்சிறுவனை ஒரு நாற்காலியில் அமரவைத்து தனது கையுறையை கழற்றிய அந்த சீமாட்டி, அவனுடைய கால்களை கழுவி, துண்டால் துடைத்தாள். அந்தக் காட்சி, இயேசு தம்முடைய சீடர்களின் கால்களை கழுவி துடைத்ததுபோல அமைந்தது. பின்னர் சாக்ஸை அவனது கால்களில் அணிவித்தாள். அப்போது அந்த சிறுவன் அவளிடம், "நீங்கள் இயேசுவின் மனைவியா?' என்று கேட்டுவிட்டான். அந்தப்பெண்மணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளுக்கு ஒரே திகைப்பு. அவளிடமிருந்து பதில் வராததால் மீண்டும் அந்தச்சிறுவன், "நீங்கள் இயேசுவுக்கு வேறு ஏதாவது வகையில் சொந்தமா?' என்று கேட்டான். அப்போது அவளது மனதில் பைபிள் வசனம் ஒன்றுதான் நினைவுக்கு வந்தது.


""நான் உங்களை கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் உங்களுக்காக தேவ வைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன். (2 கொரி.11:2)'' என்ற வசனமே அது. "தேவ கிருபையில் ஜீவனுள்ள நம்பிக்கை வைப்பதே விசுவாசம்' என்ற மார்ட்டின் லூதரின் கருத்தும் இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது. ஆண்டவரிடம் நம்பிக்கையுடன் ஜெபித்தால், நாம் கேட்பதை யார் மூலமாகவாவது அவர் தந்தருள்வார் என்பதில் சந்தேகமில்லை

வயதுக்கும் உழைப்புக்கும் சம்பந்தமில்லை

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் டப் என்ற சுவிசேஷகர் இந்தியாவிற்கு வந்து போதகராக பணியாற்றினார். அவருக்கு ஓய்வுபெறும் காலம் வந்தது. ஓய்வை விரும்பாத அவர், தன் தாய்நாடான சென்று, அங்கிருந்து இளைஞர்கள் பலரை அழைத்துக்கொண்டு மீண்டும் இந்தியா வந்து சுவிசேஷப் பணியை தொடர எண்ணினார். ஆனால், நாடு சென்ற அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இளைஞர்கள் சுவிசேஷப்பணிக்கு வர மறுத்தனர். உடனே அவர் கடுமையாகப் பேசினார்.


""அரசாங்க உத்தியோகம் என்றால் ஓடி வரும் நீங்கள், இந்த உலகத்துக்காக உயிர் கொடுத்த ஒரு உத்தமரின் அன்பை பறைசாற்ற முன்வர மறுக்கிறீர்களே! இது நியாயமா?'' என்றார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.


உடனே அவர் இன்னும் ஆவேசமாக, ""சரி! யாரும் தேவையில்லை. என் வயதையும் பொருட்படுத்தாமல் நானே அங்கு செல்கிறேன். முதுமை காரணமாக என்னால் பிரசங்கம் செய்ய முடியாவிட்டாலும், அந்த தேசத்தில் என் ஜீவனை


விதையாக ஊன்றுவேன்,'' என்றார்.


இந்த பேச்சைக் கேட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அவருடன் புறப்பட்டனர். வயதுக்கும், உழைப்புக்கும் சம்பந்தமில்லை. மன திடம் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு

Saturday, November 28, 2009

பரலோகத்தில் எந்த சபையினர் அதிகம் இருப்பார்கள்?

இன்று பல சபைகள் நாங்கள் மட்டும் தான் பரலோகத்திற்குப் போவோம் என்றூ மார்தட்டிக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.இன்னும் தெளிவாக கூறவேண்டுமெனில் நீங்கள் இந்த உபதேசத்தை அல்லது எங்கள் சபையின் உபதேசத்தை ஏற்றுகொண்டால் தான் பரலோகத்திற்கு வரமுடியும் என்று பலர் பயமுறுத்துவதுண்டு. ஆலயங்களிலும் சபைகளிலும் பெண்கள் கூட்டம் கூட்டமாக அதிகம் இருப்பார்கள் ஆனால் பரலோகத்தில் அவர்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும் என்று வேடிக்கையாக ஒரு போதகர் கூறுவார். சரி கேள்விக்கு வருவோம். எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அல்லது யார் பரலோகத்திற்கு செல்வார்கள்?
இந்த கேள்விக்கு விடை காணுமுன் இங்கிலாந்து தேசத்தின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டவரும் அத்தேசத்தில் ஒரு பெரிய எழுப்புதலுக்கு காரணமாக இருந்தவர் ஜான்வெஸ்லி. இவரின் சீரிய ஊழியத்தின் பயனாக வெஸ்லியன் சபைகள் மலர்ந்தன. ஜான்வெஸ்லிக்கு ஆண்டவர் ஒரு தரிசனம் கொடுத்தார். அத்தரிசனத்தில் ஆண்டவர் வெஸ்லியை பரலோகத்திற்கு எடுத்துச் சென்றார்.
பரலோகத்திற்குச் சென்றவுடனே வெஸ்லியின் மனதில் பரலோகத்தில் எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அவர் ஆண்டவரை திரும்பிப் பார்த்தார். ஆண்டவரோ புன்முறுவலுடன் வெஸ்லியைப் பார்த்தபடி நின்றார். பொறுமையிழந்த வெஸ்லி ஆண்டவரை நோக்கி ''ஆண்டவரே! பரலோகத்தில் எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் எங்கள் சபையான வெஸ்லியன் சபையைச் சேர்ந்தவர்கள் தானே? "என்று தைரியமாக கேட்டார். ஆண்டவரோ சிரித்த முகத்துடன்," வெஸ்லியன் சபையைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட பரலோகத்தில் இருக்க மாட்டார்கள்" என்று பதிலுரைத்தார். இதை கேட்ட வெஸ்லிக்கு தூக்கிவாரிபோட்டது. ஏனெனில் அவரது காலத்தில் வெஸ்லியன் சபையினர் மட்டுமே பரிசுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தனர். வெஸ்லியன் எழுப்புதலுக்கு முன்பு சபையில் பரிசுத்தத்தைக் குறித்த போதனைகள் மிகவும் குறைவு. அக்காலத்தில் புகைப்பது,குடிப்பது போன்றவை பாவமாக கருதப்படவில்லை. ஆகவே அதிர்ச்சியடைந்த வெஸ்லி வெஸ்லியன் சபைகளே பரலோகத்திற்கு வரமுடியாது என்றால் யார் வருவார்? என்று யோசித்தார். வெஸ்லியன் சபைகளுக்கு அடுத்தாற்போல் வசனத்திற்கேற்ப இருந்த சபை லூத்தர் அவரின் சீர்திருத்தத்தினால் பிறந்த புராட்டஸ்டாண்டு சபைகள் ஆகும். ஆகவே அந்த சபையை சேர்ந்தவர்களாவது பரலோகத்தில் அதிகம் பேர் இருப்பார்கள் என்றெண்ணியவராக,"ஆண்டவரே அப்படியானால் புராட்டஸ்டாண்டு சபையார் அதிகம் பேர் பரலோகத்தில் இருப்பார்களா?" என்று கேட்டார். ஆண்டவர் மீண்டும் புன்னகை பூத்தவாறு "அவர்களும் ஒருவர் கூட பரலோகத்தில் இருக்கமாட்டார்கள்" என்று சொன்னார். இந்த பதிலை கேட்ட வெஸ்லி மிகவும் நிலைகுலைந்து போனார். வெஸ்லியன் சபைகளுக்கும் பர்லோகத்தில் இடமில்லை, புராட்டஸ்டாண்டு சபைகளுக்கும் பரலோகத்தில் இடமில்லை. கத்தோலிக்க சபைதான் எண்ணிக்கையில் அதிகம். ஆகவே அந்த சபையாராவது சிலர் பரலோகத்தில் இருப்பர்கள் என்று நினைத்து," ஆண்டவரே! கத்தோலிக்க சபை மட்டும் தான் பரலோகத்திற்கு வருமா?" என்று வினவினார். இதற்கும் ஆண்டவர் சிரித்துக் கொண்டே "அவர்களும் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள்" என்று பதிலுரைத்தார். இப்பதில் வெஸ்லியை முற்றிலும் அதிச்சியுரச் செய்தது." இந்த உலகத்தில் உள்ள சபைப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஒருவர்கூட பரலோகத்திற்கு வரமாட்டார்களெனில், யார்தான் பரலோகத்திற்கு வர முடியும்?" என்று சோர்வாக வெஸ்லி நம் இயேசுவிடம் கேட்டார்.
அப்போது நம் ஆண்டவராகிய இயேசு வெஸ்லியை நோக்கி," இந்த உலகத்தில் யாரெல்லாம் என்னுடைய இரத்தத்தினால் பாவங்களற கழுவப்பட்டும், மன்னிக்கப்பட்டும் ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பரலோகத்திற்கு வருவார்கள். எந்த சபைப்பிரிவுகளும் பரலோகத்திற்கு வர முடியாது." (ஏனெனில் பரலோகத்தில் ஒரு சபைதான்.) என்று ஆண்டவர் பதிலுரைத்தார்.ஆண்டவரின் இப்பதில் மூலமாக வெஸ்லி உண்மையை உணர்ந்து கொண்டார்.

இந்த உதாரணத்திற்குப் பிறகும் ஒரு விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாமெல்லாரும் பரலோகத்தில் காணப்படவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். ஏனெனில் அப்பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையெனில் நமக்கான இடம் மிகவும் கொடிய இடமாகும். அவ்விடம் சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்த விழுந்துபோன தூதர் கூட்டத்தாருக்கும் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலுள்ளது. ஆகவே தைரியமாக முன்னேறிச் செல்வோம். அனேகரை அவ்விடம் கொண்டுவர நம்மாலான எளிய சிறிய பணிகளை ஆண்டவருக்காக செய்வோம்.

இந்த தபால் யாருக்கு?

பாவம் செய்வதே சுபாவம் என்று சொல்லுகிற மக்கள் நிறைந்த ஒரு பட்டணம் தான் சொர்க்கபுரி. அந்த பட்டணத்தில் வாழ்கிறவர்களை பத்தி யாரும் சொல்ல வேண்டாம். ஏனெனில் தினமும் வருகிற செய்தித்தாள்களில் அவர்களின் அன்றாட அநியாயங்களை பக்கத்துக்கு பக்கம் பார்க்கலாம். அவ்வூர் வாசிகள் அவ்வளவு பொல்லாதவர்கள். ஒரு நாள் அந்த நகரின் தபால் அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. என்ன இதுல என்ன விசயம் இருக்கு என்று நீங்க கேள்வி கேக்கிறது கேக்குது. அந்த தபாலை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் அந்த அலுவலகத்துல உள்ள எல்லருமே தலைய பிச்சிக்கிட்டாங்க. அந்த தபாலில் பெறுநர் "மகா கொடிய பாவி" என்று குறிப்பிடப் பட்டு இருந்தது. கடைசியில் அதை யாரிடம் ஒப்படைப்பது என்ற பொறுப்பை அஞ்சல் காரரான அற்புதமிடம் ஒப்படைத்தார்கள்.
இப்போ அதை யாரிடம் ஒப்படைப்பது என்று அற்புதம் தலைய பிச்சுகிட்டு யோசித்துக் கொண்டு இருந்தார். பின்பு ஒரு முடிவுக்கு வந்தவராக தன் இருப்பிடத்தை விட்டு எழுந்தார். சரி நமக்கு தெரிந்த மகா பாவிகளை பார்த்து அவர்களிடம் இதை ஒப்படைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவரிடம் துளிர் விட்டதே அதற்குக் காரணம்.
முதலாவது அவர் நேராக சாராயக் கடை நடத்திக் கொண்டுவருபவரும் ஊரில் அமைதி என்பது மருந்துக்கு கூட வந்து விடக் கூடாது என்று நினைத்து அதற்கு என்ன என்ன செய்யணுமோ அத்தனையும் செய்து வருகிற மகாதேவன் என்பவரிடம் போனார். அவரிடம் தான் வந்த நோக்கத்தைக் கூறி தன்னிடமிருந்த பார்சலையும் அற்புதம் அவரிடம் காண்பித்தார். அதிலிருந்த "மகா பாவிக்கு" என்ற மேல் விலாசத்தை பார்த்ததும் மகாதேவன் கோபதேவனாக மாறிவிட்டார். அவர் பெசின பேச்சுகளை கேட்க சகிக்காமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவரிடமிருந்து தலைதெறிக்க அற்புதம் ஓடி வந்தார். முதல் முயற்சியே பயங்கரமான பயத்தை அவரிடம் உண்டு பண்ணிவிட்டது. இனி இதை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த போது தான் அந்த ஊரின் அடுத்த கேடி நம்பர்- 1 கோடிஸ்வரன் நினைவுக்கு வந்தார்.

அவருடைய உண்மையான பெயர் அந்த ஊரில் யாருக்கும் தெரியாது. அவரை எல்லாருமே கேடி என்றுதான் கூப்பிட்டு வந்தாங்க. அவர் காட்டுல பெய்த மழை அவரை கோடிஸ்வரனாக கடந்த தேர்தல் மாற்றிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் பல கட்சிக் கொடிகள். இந்த கோடிஸ்வரன் மகாக் கேடியாக இருந்தாலும் யாரையும் காரணமில்லாம கொல்றதில்லை. எனவே சற்று தெம்புடன் அற்புதம் அவரை பார்க்கச் சென்றார். அவரிடம் விசயத்தைக் கூறி அந்த பார்சலை அவரிடம் காண்பித்தார். அந்த பார்சலில் யாருக்கு வந்திருக்கிறது என்று வாசிக்கும் படி அற்புதத்திடமே அவர் கேட்டார். "மகா பாவிக்கு" என்று அற்புதம் சொன்ன உடனே கேடிஸ்வரன்... சாரி கோடிஸ்வரனுக்கு கொஞ்சம் கோபம் வந்தது. பின்பு சிரித்த முகத்துடன் இப்படி ஒரு தபாலை யாரு அனுப்பினா என்று கேட்டுவிட்டு சற்று தயங்கியவராக "அற்புதம் நீ நினைக்கிற மாதிரியான ஆளாக நான் இருந்தாலும், நான் இதை இப்ப உன்னிடமிருந்து வாங்கினால் எதிர் கட்சிக் காரங்க என்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க. லஞ்சமா ஏதாவது பெட்டி வாங்கினாலாவது பரவா இல்ல. இந்த 'மக பாவி" பட்டத்த எல்லாம் வாங்க முடியாது, நீ போய் விடு" என்று சொல்லி விட்டார். வெளியே வந்த அற்புதம் இவர் பரவா இல்லை, அந்த மகாதேவந்தான் படு மோசம் என்று நினைத்துக் கொண்டார்.
மீண்டும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு யாரிடம் கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு பெயர்களும் அவர் நினைவுக்கு வரும் போது அவருக்கௌ தன் கல்லறை தான் முன்னால இருக்கிற மாதிரி தோன்றியது.என்ன செய்வதென்றே அவருக்கு தெரிய வில்லை. திடீரென்று அவருக்கு ஒரு உணர்வு வந்தது. உண்மையில் மகா பாவிகள் எல்லாம் அதை ஒத்துகொள்ள முன் வர வில்லை. நாமும் கூட ஒரு பாவிதானே. எத்தனை தடவை மற்றவங்களுக்கு தெரியாம தவறுகள் செய்து உள்ளோம் என்று அவர் நினைத்தார். நானே அந்த "மகா பாவி" என்று பாவித்துக் கொண்டு பார்சலை நாமே பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தார். அது போலவே அவர் தன்னுடைய கையெழுத்தை போட்டு பார்சலை தன் வசமாக எடுத்துக் கொண்டார்.
பார்சலை தன் பெயரிட்டு எடுத்துக் கொண்டவுடனே அதினுள்ளே என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்வதில் அவருக்கு அதிக ஆவல் ஏற்பட்டது. உடனே பார்சல் உறையைக் கிழித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தார். உள்ளே ஒரு "விலையுயர்ந்த பரிசுப் பொருள்" இருந்தது. அத்துடன் ஒரு கடிதமும் இணைக்கப் பட்டிருந்தது. அந்த கடிதத்தில், "நீங்கள் உங்களை 'மகா பாவி' என்று ஒத்துக் கொண்டதால் இந்த பரிசு உங்களுக்கே என்று எழுதப் பட்டு இருந்தது. அதைப் பார்த்தவுடன் ஆச்சரியமும் சந்தோசத்துடனும் அவர் தன் பரிசை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிப் போய் தான் பெற்ற பரிசை தன் வீட்டார், உற்றார் மற்றும் உறவினர்கள் எல்லாருக்கும் அதை தான் பெற்றுக் கொண்ட விதத்தைக் கூறினார். எல்லாரும் ஆச்சரியப் பட்டு தங்களுக்கு அப்படி ஒரு "பரிசு" கிடைக்க வில்லையே என்று நினைத்தனர்.


நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
சங்கீதம் 79:9 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.
சங்கீதம் 25:18 என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
சங்கீதம் 51:9 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.

அன்போ சகல பாவங்களையும் மூடும்.
I யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்

நான்கு நண்பர்கள்

நான்கு நண்பர்கள்

அன்பு அமைதி இறக்கம் முயற்ச்சி

ஒரு முறை இவர்கள் இனைந்து ஒரு வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அந்த வீட்டின் சோந்த காரர் வந்து என்ன வேலை செய்கிறீர்கள் என்று கண்ணாபின்னா வென்று திட்டி விட்டு சென்றார்

அதை பார்த்து அன்பு சென்னது என்ன மனிதன் இவன் இத்தனை கஸ்டபட்டு நாம் வேலை செய்கிறோம் அன்பு என்பது கொஞ்சமும் இல்லாது இவர் இப்படி திட்டிவிட்டு செல்கிறார் என்னால் இவருக்கு வேலை செய்ய இயலாது என்று கூறிவிட்டது

அமைதியாக இருந்த அமைதி அமைதியே இல்லா இநத மனிதனிடம் எனக்கும் வேலைசெய்ய விருப்பம் இல்லை என்று நின்று விட்டது

இதை பார்த்த இறக்கம் என்ன இது காலையிலிருந்து கஸ்டபட்டு வேலை செய்கிறோம் இவருக்கு துளிகூட இறக்கம் இல்லை இவருக்கு வேலைசெய்து என்ன ஆகபோகிறது என்று அதுவம் நின்று விட்டது

இவற்றை பார்த்தாலும் யாரையும் கவனிக்காது தனது வேலையை சரியாய் செய்து கொண்டிருந்தது முயற்ச்சி

இவற்றை கவனித்து கொண்டு இருந்த அந்த வீட்டின் சொந்தகாரரின் மகன் முயற்சியிடம் வந்து கேட்டான் என்ன மாமா மத்தவங்க எல்லாம் வேலை செய்யாவிட்டாலும் நீங்க மட்டும் வேலை செய்து கோன்டே இருக்கீங்க ஏன் என்றன்

அதற்கு முயற்சி சென்னது இந்த வேலையை செய்து முடித்ததும் நான் அடுத்த வேலைக்கு செல்லலாம் இல்லாவிட்டால் எப்படியும் இதை செய்து முடிக்கும் வரை இங்கு இருந்து செல்லமுடியாது எனவே எனது கடமையை நான் செய்கிறோன் நேரத்தை வினாக்காது என் கடமை முடிந்ததும் நான் சேவ்வனே செல்வேன் என்றது

அப்போழது தான் புரிந்தது அன்பு அமைதி இறக்கம் தாங்கள் செய்த தவறு

என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
மத்தேயு 10-22

நாம் நம் ஊழியத்தை செய்தால் தேவனின் கிருபை தானாய் தோடிவரும்
வாழ்க்கையில் சோர்வுகள் வரும் அனால் முயற்சி என்பதை செய்து கொன்டே இருக்க வெண்டும்

Saturday, November 21, 2009

நீங்கள் மற்றவர்களோடு இரட்சிப்பை பகிர்ந்துகொள்ளும்போது பயன்படுத்தவேண்டிய வசனங்கள்

மாற்கு 8:36,37 (Mark 8:36,37)
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

--------------------------------------------------------------------------------
லூக்கா 12:15 (Luke 12:15)
15. பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

--------------------------------------------------------------------------------
ரோமர் 3:10-12,23 (Romans 3:10-12,23)
10. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
11. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
12. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை
23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

--------------------------------------------------------------------------------
சங்கீதம் 53:1 (Psalms 53:1)
1. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

--------------------------------------------------------------------------------
மாற்கு 7:20-23 (Mark 7:20-23)
20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், துாஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

--------------------------------------------------------------------------------
கலாத்தியர் 5:19-21 (Galatians 5:19-21)
19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21. பொறாமைகள், கொலைகள், வெறிகள்,களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

--------------------------------------------------------------------------------
வெளிப்படுத்தல் 21:8 (Revelation 21:8)
21. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

--------------------------------------------------------------------------------
சங்கீதம் 10:4 (Psalms 10:4)
4. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.

--------------------------------------------------------------------------------
யாத்திராகமம் 20:3-5 (Exodus 20:3-5)
3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழத் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

--------------------------------------------------------------------------------
ஏசாயா 44:6,9-20 (Isaiah 44:6,9-20)
6. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிரதேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
9. விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
10. ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?
11. இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்;தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள்.
12. கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
13. தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு உளிகளினால் உருப்படுத்தி கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.
14. அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.
15. மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு உக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
16. அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
17. அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
18. அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
19. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியானதுண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
20. அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

--------------------------------------------------------------------------------
சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
8. இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்

--------------------------------------------------------------------------------
ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)
1. இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
2. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
3. ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.
4. நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

--------------------------------------------------------------------------------
நீதிமொழிகள் 28:13,9 (Proverbs 28:13,9)
13. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
9. வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

--------------------------------------------------------------------------------
சங்கீதம் 32:1,2 (Psalms 32:1,2)
1. எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.
2.எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.

--------------------------------------------------------------------------------
ரோமர் 6:23 (Romans 6:23)
23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.

--------------------------------------------------------------------------------
யோவான் 17:3 (John 17:3)
3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

--------------------------------------------------------------------------------
எசேக்கியேல் 18:23,32 (Ezek 18:23,32)
23. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
32. மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

--------------------------------------------------------------------------------
1 தீமோத்தேயு 1:15 (1 Timo 1:15)
15. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

--------------------------------------------------------------------------------
1 கொரிந்தியர் 3:16,17 (1 Corinthians 3:16, 17)
16. நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

--------------------------------------------------------------------------------
எபிரெயர் 9:27 (Hebrews 9:27)
27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

--------------------------------------------------------------------------------
1 யோவான் 1:7-10 (1 John 1:7-10)
7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

--------------------------------------------------------------------------------
ஏசாயா 53:4-6 (Isaiah 53:4-6)
4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

--------------------------------------------------------------------------------
யோவான் 3:16-18 (John 3:16-18)
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

--------------------------------------------------------------------------------
ரோமர் 5:8 (Romans 5:8)
8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

--------------------------------------------------------------------------------
அப்போஸ்தலர் 17:30,31 (Acts 17:30,31)
30. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்

--------------------------------------------------------------------------------
மத்தேயு 11:28 (Matt 11:28)
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.

--------------------------------------------------------------------------------
வெளிப்படுத்தல் 3:20 (Rev 3:20)
20. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

--------------------------------------------------------------------------------
யோவான் 10:9 (John 10:9)
9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

--------------------------------------------------------------------------------
யோவான் 14:6 (John 14:6)
6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

--------------------------------------------------------------------------------
அப்போஸ்தலர் 4:12 (Acts 4:12)
12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றா

--------------------------------------------------------------------------------
1 தீமோத்தேயு 2:5 (1 Timothy 2:5)
5. தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

--------------------------------------------------------------------------------
ஏசாயா 43:11 (Isaiah 43:11)
11. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

--------------------------------------------------------------------------------
ரோமர் 10:9,10 (Romans 10:9,10)
9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

--------------------------------------------------------------------------------
அப்போஸ்தலர் 16:31 (Acts 16:31)
31. அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

--------------------------------------------------------------------------------
யோவான் 1:12 (John 1:12)
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

--------------------------------------------------------------------------------
1 யோவான் 5:12,13 (1 John 5:12,13)
12. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
13. உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், அவருடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவனுடைய குமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்

--------------------------------------------------------------------------------
யோவான் 3:36 (John 3:36)
36. குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்

--------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------
நீதிமொழிகள் 27:1 (Proverbs 27:1)
1. நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

--------------------------------------------------------------------------------
நீதிமொழிகள் 29:1 (Proverbs 29:1)
1. அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
--------------------------------------------------------------------------------
நீதிமொழிகள் 1:23-33 (Proverbs 1:23-33)
23. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24. நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
25. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
26. ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
27. நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
28. அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
29. அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
30. என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.
31. ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
32. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
33. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

--------------------------------------------------------------------------------
1 யோவான் 2:22 (1 John 2:22)
22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

--------------------------------------------------------------------------------
1 யோவான் 4:3 (1 John 4:3)
3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும்தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

--------------------------------------------------------------------------------
வெளி 1:7,8 (Rev 1:7,8)
7. இதோ, மேகங்களுடனே வருகிறார்;கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
8. இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

Friday, November 20, 2009

நல்லவர் அவரை புகழுங்கள்

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரிய மக்தலேனா
நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்;
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தம் காப்பார்,
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.

அன்பு காண் மரியாள் மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்,
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலேனா
ஆஹா!சாலப் பெருங்களி யிஃதே.

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்,
வண்மைப் பேருயிர்- யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியாள் மக்தலேனா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.