தந்தையுடன் அவருடைய மகன் நடந்து சென்றான். அவனுக்கு தான் அணிந்திருந்த கோட்டின் மேல் அளவில்லாத ஆசை. இரண்டு கைகளையும் கோட் பைக்குள் திணித்துக் கொண்டு பெருமையாக நடந்தான்.
கப்பனார் சொன்னார், ""மகனே! மழை பெய்து ஈரமாய் இருக்கிறது. உன் கால்கள் சறுக்கலாம். என் கைகளைப் பிடித்துக் கொள்'' என்றார். ஆனால், சிறுவனோ கோட் பையிலிருந்து தன் கைகளை எடுக்கவில்லை. ஸ்டைலாக நடந்து வந்தான்.
திடீரென்று சரளைக் கற்கள் சிறுவனின் கால்களை வாரிவிட்டன. தடுமாறிய அவன் கீழே விழுந்ததால் பலத்த அடிபட்டான். முழங்காலில் ரத்தம் பீறிட்டது. அன்று அவன் ஒரு அருமையான பாடத்தைக் கற்றுக் கொண்டான். பலமுள்ள தன் தகப்பனின் உறுதியான கரங்களைப் பற்றிப் பிடித்து நடக்க தீர்மானித்தான்.
கர்த்தர் நம்மை நடத்துகிறார். நித்தமும் நம்மை நடத்துகிறவர்.(ஏசா.58:11) மரணப் பரியந்தமும் நடத்துகிறவர்(சங்:48:14) ஜீவ தண்ணீருள்ள ஊற்றுகள் அண்டைக்கு அவருடைய கரங்களைப் பிடித்து நடப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!
Jesus With Us
Sunday, August 1, 2010
அன்பிருந்தால் அச்சமில்லை
* அன்பு யாவருக்கும் நன்மை செய்யும். பொறாமை கொள்ளாது. தற்புகழ்ச்சி செய்யாது. இறுமாப்பு அடையாது.அன்புள்ளவருக்கு அச்சத்திற்கு இடமேயில்லை. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவாராக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது.
* இளைஞர்களே! இளமையின் நாட்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனக்கவலையை ஒழியுங்கள்.
உடலுக்கு ஊறுவராதபடி காத்துக் கொள்ளுங்கள்.
* ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக் கொள்வான். இறுமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான். தந்தையையும், தாயையும் கொடுமைப்படுத்தும் மகன் வெட்கக்கேட்டையும்,
இழிவையும் வருவித்துக் கொள்வான்.
* கடவுளே உங்களுள் செயலாற்றுகிறார். அவரே, தமது திருவுள்ளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.
* நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றாலே என்ன என்றே தெரியாத கபடமற்றவர்களாயும் இருக்கவேண்டும்.
* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்பநாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.

Subscribe to:
Posts (Atom)